அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று (11) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் –
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது.
இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” என அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வரும் மலேசிய பிரதமர்!
பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்தது போன்று அரசியல் தீர்வுக்கும் தமிழ் தேசிய ...
|
|