அரசியலமைப்பு தொடர்பில் விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானம்!

அரசியலமைப்பு நகல் தயாரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு பயிற்சிகளை வழங்குவதற்கு, அரசியலமைப்பு நகல் தயாரிப்பு தொடர்பிலான இரண்டு நிபுணர்களை பிரித்தானியாவிலிருந்து அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு நகலை தயாரிக்கும் பணியில், சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட அரசியலமைப்பு சபை ஈடுபட்டு வருகின்றது.இந்த விடயம் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்கில் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவொன்றும் தொழிற்படுகின்றது.
அரசியலமைப்பு குழு இதுவரை 27 தடவைகள் கூடியுள்ளது.தேர்தல் மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று அதிகாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் தற்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டு வருவதாக அரசியலமைப்பு நடவடிக்கை குழுவின் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைவாக அரசியலமைப்பு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டவாக்கல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கு, சரளமான சட்டத்தை வகுக்கக்கூடிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் தி்ங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இதுதொடர்பான பயிற்சிக் கருத்தரங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசியல் நடவடிக்கை குழுவின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|