அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட தீர்மானம்?

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையிலான ஏற்பாடுகளைக் கொண்டதாக குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருந்தது.எனினும் குறித்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதாயின் அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்வதுடன் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றையும் நடத்த வேண்டி வரும் என்று சட்டவல்லுனர்கள் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த திருத்தச் சட்டத்தைக் கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.20வது திருத்தச் சட்டம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காரைநகர் சண்டிலிப்பாய் ஊர்காவற்றுறை/ சங்கானை பிரதேச மக்களுக்கு புதிய நடைமுறையில் எரிபொருள் விநியோகம்...
பிரதமர் தினேஷ் குணவர்தன - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில...
டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம் - மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் எனவும் ...
|
|