அரசியலமைப்பின் 44/3 சரத்தை உறுதிசெய்ய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு!
Monday, November 7th, 2022
அரசியலமைப்பின் 44/3 சரத்தின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அரசியலமைப்பின் 44/3 ஆவது சரத்தின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
இதன்படி, பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள், தேசிய கொள்கை அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் பல அமைச்சுக்களை ஜனாதிபதி தமது பொறுப்பில் வைத்திருப்பதற்கு 44/3 ஆவது பிரிவின் பிரகாரம் பிரதமரின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி எழுத்து மூலம் கோரியுள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் 44/3 ஆவது பிரிவின்படி பிரதமர் அதற்கு தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு...
பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை - வானிலை அவதான நிலையம்!
இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் - சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !
|
|
|


