“அம்பான்” சூறாவளி “ இலங்கையின் பல பகுதிகளில் அடைமழை – எச்சரிக்கிறது வளிமண்டவியல் திணைக்களம்!
Tuesday, May 19th, 2020
அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு மையம் கொண்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது நாளையதினம் 20 ஆம் திகதி பிற்பகல் வடக்கு மற்றும் வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர்வரையான மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்துடன் தென்மாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வளிமண்டவியல் திணைக்களம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


