அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி – இலங்கை மத்திய வங்கி தகவல்!
Wednesday, March 15th, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி, இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 344 ரூபா 66 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது.
நேற்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு!
யாழ்ப்பாணம் - மானிப்பாய் - கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!
ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - சுகாதார ச...
|
|
|


