அமெரிக்க உதவி திட்ட உடன்படிக்கை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

சுமார் 480 மில்லியன் டொலர்களை கொண்ட, அமெரிக்காவின் ‘மிலேனியம் செலேஞ் கோப்பரேசன்’ உதவி திட்ட உடன்படிக்கையின் முன் ஒவ்வொரு விடயமும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த உதவி திட்டம் ஐந்து வருட அடிப்படையில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் வாகன நெருக்கடியை குறைத்தல், பொதுப்போக்குவரத்தை சீர்ப்படுத்தல் உட்பட்ட விடயங்களுக்கு தீர்வு காணப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை செய்வதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அவசியம். எனினும் அதற்கு முன்னதாக அந்த உடன்படிக்கை தொடர்பில் ஒவ்வொரு பந்தியும், அவதானமாக வாசித்தறியப்பட வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த அரசாங்கத்துக்கு இந்த உதவி திட்டத்தை பெற்று கொள்ள முடியவில்லை. எனினும் தமது அரசாங்கத்துக்கு அதனை பெற்று கொள்ள முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி உடன்படிக்கையின் சில இடங்களில் காணி தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|