அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவு வலுவாக உள்ளது – உறவுகளை மேலும் வலுப்படுத்தி இணைந்து பணியாற்றத் தயார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்தில், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குவர்த்தன தெரிவித்துள்ளார்.
1948 இல் இராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு தொடங்கும் பேணப்படுவதாகவும் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த உறவை வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கிய விலைமதிப்பற்ற உதவிக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான நிலையில் இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|