அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி!

Monday, August 7th, 2017

நாட்டில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கே நல்லாட்சி அரசு முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு வருவதா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டிலுள்ள சிறுவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதோடு, கிராமத்து மக்கள் தாம் எதிர்கொள்ளும் நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்து அவர்களது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டினது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தியின் பிரதிபலன்களை பெற்றுக் கொடுத்து அவர்களது பொருளாதாரத்தை செழிப்பாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: