அபிவிருத்திக்கு தயாராகிறது பலாலி விமான நிலையம்!

Saturday, June 29th, 2019

தென்னிந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் வகையிலும், வடக்கில் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிவில் விமான சேவைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பலாலி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தரையிறக்குவதற்கான ஓடு பாதையை அமைக்க வேண்டியுள்ளதாகவும், தற்போது 70 பேர் பயணிக்கும் விமானத்தை மாத்திரமே அங்கு தரையிறக்க முடியுமென இதன்போது கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக பலாலிவிமான நிலைய ஓடு பாதையை விரிவுபடுத்த நடவடிக்கையெடுக்க எதிர்பார்ப்பதாகவும், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: