அன்னையருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

Sunday, May 9th, 2021

பல சவால்களுக்கு மத்தியில் உலகிற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு தன்னை அர்ப்பணிக்கும் தியாகத் தாய்மாருக்கு உலக அன்னையர் தினத்தன்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபகச தெரிவித்துள்ளார்.

உலகில் எதற்கும் ஈடு இணையற்றவர் ஒருவர் என்றால் அவர் அன்னை தான். அனைவருக்கும் அன்னைதான் முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே.

வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் மே 2 ஆவது ஞாயிறு உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இத் தினத்தில் பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுருவான அனைத்து அன்னையருக்கும் நல்வாழ்த்துகள். பண்டைய கிரீசில், ‘ரியா’ என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தப்பட்டது. ரோமிலும் ‘சிபெல்லா’ என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். இன்றைய அன்னையர் தினம் நேரடியாகத் தாய்மார்களை குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது.

நவீன அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன. சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். ‘எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்

Related posts: