அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!
 Tuesday, October 26th, 2021
        
                    Tuesday, October 26th, 2021
            
அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட மத வழிபாடுகளை நடத்திச் செல்ல, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பௌத்தர்கள் பௌர்ணமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும் என்றும், கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள், சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து, தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அமுலிலுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளில் மேலு; தளர்வுகள் மேற்கொளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக கடந்த நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள விதிகளின் கீழ் நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நேற்றிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ள முடியும்.
திறந்த இடங்களில் ஒழுங்கு செய்யப்படும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு பங்கேற்கலாம். எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடுதலாக 75 பேருக்கு இருக்க முடியும் .இது மூன்றில் ஒரு பகுதியாகும் திறந்தவெளி உணவகங்களை நடத்திச் செல்லவும் ஊக்குவிக்கப்படுகிறது.
அலுவலக கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் புதிய விதி அறிவிக்கபட்டுள்ளது. இதற்கமைவாக ,இதுகுறித்த மண்டபம் அல்லது 1/3 இடத்தில் கூட்டத்தை நடத்தலாம். அதிகபட்சம் 150 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
;
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        