அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுபாஸ் விடுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த குறித்த கிளினிக்கள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 மருத்துவக் கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் அனைவரும் விக்ரோரியா வீதியில் புதிதாகத் திறப்பட்டுள்ள நுழைவாயிலூடாக ( இல.9 B) வருகை தந்து வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற முடியும். 

அதேவேளை இதய சிகிச்சை கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் விக்ரோரியா வீதியில் உள்ள வைத்தியசாலையின் 11ஆம் இலக்க நுழைவாயிலூடாக வருகைதந்து இதய சிகிச்சை கிளினிக்கிற்குச் செல்ல முடியும்.

இது இதய சிகிச்சை விடுதிக்கு பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: