அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது!
Sunday, March 19th, 2017
அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கற்பிட்டி சின்னப்பாடு பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் இருந்து மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் நோயாளர் காவு வண்டி சாரதிகள்!
இலங்கையில் சிசு மரணங்கள் குறைப்பு!
சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க...
|
|
|


