அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமானது.

Tuesday, May 30th, 2017

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலும்ரூபவ் வெவ்வேறு இடங்களிலும்; தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நீரினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பெருமழை பெருவெள்ளம் மண்சரிவு காரணமாக

பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர் நண்பர்கள்; வீடுகளிலும்ரூபவ் தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர்உணவுரூபவ் குடிநீர்ரூபவ் சுகாதார வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெருமளவிலான கர்ப்பிணித்

தாய்மார்கள்ரூபவ் குழந்தைகள்ரூபவ் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கழிவுப்பொருட்கள் கலந்த நீர் பல இடங்களிலும்; தேங்கிக் காணப்படுவதால் அந்த நீரில் கர்ப்பிணித் தாய்மார்கள்ரூபவ் குழந்தைகள் நடமாடுவதையோரூபவ் அந்நீரை உபயோகிக்க வேண்டாமென சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் கர்ப்பிணித்தாய்மார்கள்ரூபவ் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதன் காரணமாகரூபவ் மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும்ரூபவ் அலோசனைகளையும் வழங்க வேண்டியது அவசியமானது என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக சொந்த இடங்களுக்கு மறுஅறிவித்தல்வரை திரும்ப வேண்டாமெனன்றும் சுகாதாரத்துறையினர் மக்கக்க எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: