அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுபவர்களுக்கு தங்குமிடவசதி – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா!
Friday, December 16th, 2016
இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுபவர்களுக்காக பாதுகாப்பான தங்குமிடமொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கடும் மழை காரணமாக அடிக்கடி மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன. கூடுதலாக அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பகுதியாக பதுளை மாவட்டம் விளங்குகின்றது.
இதனால் இந்த மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு பாதுகாப்பு மத்திய நிலையம் அமைக்கப்படும். பதுளை மாவட்டத்தில் பலாங்கொட தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான அரை ஏக்கர் காணி இதற்காக பயன்படுத்தப்படும்.இதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் மின்தடை !
நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடல்!
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு - உ...
|
|
|


