அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பில்லை!
Tuesday, August 3rd, 2021
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில் 310 கி.மீ (190 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நில நடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
பேரிடர் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகள் பட்டியல் இந்தியாவுக்கு 77 வது இடம்!
வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு - பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது!
பிரதமர் மஹிந்த ராஜபச்சவுக்கு இன்று அகவை 76 - இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்தவர் மஹிந்த ராஜபக்ச ...
|
|
|


