அநாவசியமாக நோயாளர்களை பார்வையிட செல்லவேண்டாம் – பொதுமக்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை!

Sunday, October 11th, 2020

வைத்தியசாலைகளுக்கு சென்று அநாவசியமாக நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை பார்வையிட செல்வோர், தமது உடல்நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமெனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசியம் காணப்பட்டால் மாத்திரம் வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் நாட்டில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த இருவர் அடங்குகின்றனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3,306 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: