அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!
Tuesday, July 25th, 2023
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே நேற்று(24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ...
வரிச்சலுகை கோருகின்றது சீனா : குழப்பத்தில் இலங்கை !
சுவிஸிலிருந்து நிதி - செல்வபுரத்தில் வாள்வெட்டு – யாழ்ப்பாணத்தில் 6 பேர் கைது!
|
|
|


