அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் இழுவை படகுகள் இரண்டு பருத்தித்துறை கடற்பரப்பில் தடுத்துவைப்பு!
Tuesday, October 3rd, 2017
இலங்கைக் கடல் எல்லைக்கள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய மீனவர்களது இரண்டு இழுவைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 12 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் எமது விஷேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறிய வகையில் மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த இழுவைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பருத்தித்துறை துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன்பிடி இழுவைப் படகில் தொழிலிலீடுபட்ட 12 இந்திய மீனவர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிவாரணம் - பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
அரசில் இருப்பதற்குப் பொருத்தமற்ற ஒருவரே சரத் வீரசேகர - அமைச்சர் மனுஷ சுட்டிக்காட்டு!
|
|
|


