அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை தொடர்ந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு பாரியளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்டபடையில் 1 கிலோ பருப்பின் விலை சுமார் 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு - நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
|
|