அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை!!
Thursday, August 3rd, 2023
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கால்நடைகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் சில இடங்களில் கால்நடை வைத்தியர்களுக்கான தேவை காணப்படாத கால் நடை வைத்தியர்கள் பணியாற்றுவதாக அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான கால்நடை வைத்தியர்களை தேவை காணப்படுகின்ற பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்துமாறும் அந்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய இராணுவத் தளபதி கூறும் உறுதி!
ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை - அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் அ...
1700 கிலோ எடைகொண்ட வாகனத்தை தாடியில் கயிறு கட்டி இழுத்த இலங்கை முதியவர் - சோழன் சாதனை புத்தகத்திலும்...
|
|
|


