அதிவேக நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை!

Friday, July 13th, 2018

அதிவேக நெடுஞ்சாலை வீதியில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் நடத்துநர் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பாவனைக்குப் பொருத்தமில்லாத ரயருடன் பயணிக்கும் வாகனங்கள் காற்றுப் போனால் நெடுஞ்சாலை வீதியில் வாகனத்தை நிறுத்தி ரயர் மாற்றுவது தடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு நடைபெறுமாயின் அதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தைச் செலுத்திச் செல்லும் போது தூக்கக்கலக்கம் ஏற்படுமாயின் 44 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் வெலிப்பனை ஓய்வெடுக்கும் மத்திய நிலையத்தில் ஓய்வெடுக்க முடியும். இல்லாவிட்டால் அருகிலுள்ள வெளியே செல்லும் வழி ஊடாகச் செல்ல வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை வீதியில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் தூக்கம் மற்றும் சோர்வின் காரணமாக 15:20 விகிதமான அளவு விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் நடத்துநர் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Related posts: