அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Tuesday, July 27th, 2021
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றயைதினம் இடம்பெறவுள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக அமைச்சர்கள் சிலர் பங்கேற்கவுள்ளனர்.
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள இணையவழி கற்றல் புறக்கணிப்பு இன்று (27) 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று (26) இடம்பெற்ற இணையவழி அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அடுத்த வருடம்முதல் புதிய முறைமை ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் குறித்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


