அதிதிகளுக்கான தேநீர் விருந்தை தவிர்க்குமாறு ஜனாதிபதி யோசனை – இம்முறை அவசியமில்லையென அதிகாரிகளுக்கும் பணிப்புரை!

Saturday, November 5th, 2022

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்ட விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி - சுகாதார அதிகாரிகள் சுட்...
இலங்கையில் புதிய வைரஸ் பிறழ்வால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் - சுகாதார தரப்பினர் எச்சரிக்...
மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்க உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...