அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் – கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க எச்சரிக்கை!

Thursday, March 7th, 2024

நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.

அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க கண்ணாடி பயன்படுத்துவதும் அவசியம் என்று கண் மருத்துவர் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக கண்களை பாதிக்காத தொப்பிகளை பயன்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வலுவான அரசாங்கத்தை உருவாக்க தயார் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அற...
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரி...
நாளை இரவுமுதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் படிப்படியாக மழை வீழ்ச்ச...