அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் விசேட நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 2nd, 2024

நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக இன்றுமுதல் (02) விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பயணிகள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ்.சி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 30 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: