அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளால் இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் – விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய எச்சரிக்கை!
Sunday, April 9th, 2023
அதிக ஒலி எழுப்பும் கேட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும்திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது மற்றும் மூக்கு தொடர்பான விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது, கேட்டல் கருவிகளைப் பயன்படுத்தியவாறு பாடல்களைக் கேட்கின்றனர். குறிப்பாக, ஹெட்செட், ஹேண்ஸ்ப்றீ உள்ளிட்ட கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதன்போது, ஓசையின் அளவை 60 இற்கும் குறைந்த அளவில் வைத்துக்கொண்டு, ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த காலமே, செவிமடுக்க வேண்டும். இதனை விடவும் அதிக நேரம் செவிமடுத்தால், காதுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த செயற்பாடானது, முதியவர்களைப் போன்று, இளைஞர்களுக்கும், கேட்கும் திறன் குறைவடையச் செய்வதில் தாக்கம் செலுத்தும் என வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


