அதிகார பகிர்வை சுமந்திரனே இல்லாமலாக்கினார் – நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா!
 Friday, July 26th, 2019
        
                    Friday, July 26th, 2019
            
புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரித்துக்கொள்ள முற்பட்டபோது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கி மக்கள் கருத்துக்கணிப்புடன் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அபிலாஷையை சுமந்திரன் நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சியால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.
அந்தவகையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்துக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே இல்லாமலாக்கினார் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்துக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக்கொண்ட பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இனி கிடைப்பது சந்தேகம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் இனி ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் இதன்போது கூறினார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        