அதிகரித்துச் செல்லும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை!
Tuesday, May 25th, 2021
ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை அடுத்து, குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இந்தவாரம் மேற்கொண்ட மதிப்பாய்வு நடவடிக்கையை அடுத்து 4 ஆம் எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா இலங்கையியை உள்ளடக்கியுள்ளது.
இதேவேளை ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் எச்சரித்துள்ளது.
அத்தோடு குறித்த நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவல் திட்டமிட்டு செயலல்ல - விசாரணைகளை மேற்கொண்ட குழு தெரிவிப்பு!
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...
கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் - மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து!
|
|
|


