அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
Wednesday, July 12th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களாக, டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி என, 3 வகையான போட்டிகளினதும் தலைவராக, மத்தியூஸ் விளங்கிய போதிலும், தற்போது 2 பேருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெஸ்ட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ள அதேநேரத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றின் தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
சாதாரணதர பரீட்சை மீள் ஆய்வு பெறுபேறுகள் வெளியாகின!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 ஆண்டுகள் பூர்த்தி!
|
|
|


