அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
Sunday, May 29th, 2022
பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் காணாமல் போன நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம்: வழக்கு விசாரணை ...
வடமராட்சி படுகொலை: தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்!
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு - நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவு!
|
|
|


