அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!
Wednesday, August 30th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்றக் குழாய் அமைப்பை நிறுவும் பணிகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் பிற்போடப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய வேட்பு மனு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் - 581 மில்லியன் ரூபா செலவில் முல்லையில் 868 வீடுகள்!
உலக வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!
|
|
|


