அடுத்த மாதம்முதல் உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில அறிவிப்பு!
Sunday, September 13th, 2020
உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்
நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அத்துடன் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜனாதிபதித் தேர்தல் : பொலிஸாருக்கு 668 மில்லியன் ரூபா தேவை!
தென்னாசிய நாடுகளின் மீது கரிசனையாம் - இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து...
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவு - சீனா அறிவிப்பு!
|
|
|


