அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, April 16th, 2024ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகா சங்கத்தினரும் ஏனைய சமயத் தலைவர்களும் தன்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதால், அது தொடர்பில் மேலும் சிந்தித்து முடிவெடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
000
Related posts:
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த ...
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டம் - கடற்றொழில் இர...
|
|
|


