அடுத்த இரு வாரங்களும் அவதானம் மிக்கது – விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!
 Wednesday, April 8th, 2020
        
                    Wednesday, April 8th, 2020
            
கொரோனா வைரசின் இரண்டாம் கட்ட வீரியமான செயற்பாட்டை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் எதிர்பார்ப்பதவும் அதனால் அதை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயற்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் நேற்றும் (07) உயிழந்தார்.
தெஹிவளை அருணாலோக்க பகுதியில் வசித்த 80 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 27 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த 30 ஆம் திகதி கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் அவர் அங்கொட தேசிய தொற்று நோயியல் ஆய்வு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் மருமகன் ஒரு சுற்றுலாவழிக்காட்டியாவார். தற்போதும் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பேரன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அவர்கள் அங்கொட தேசிய தொற்று நோயியல் ஆய்வு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் இறுதி கிரிகைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        