அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்’ – ரணிலை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயார் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பல எதிர்க்கட்சிகளும் தயாராகிவருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – “தேர்தலொன்றுக்கு நாடு தயாராகிக்கொண்டு வருகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டாகும். நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக களமிறக்கப்படுவார்.
எதிர்க்கட்சில் உள்ள சிலர் வேண்டுமென்றால் வேறு வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கலாம். அரசியல் நலன்களுக்கு அப்பால் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளனர்“ என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும். நாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகளவாக உருவாகி வருகின்றனர். ஆனால், அதிக வாக்காளர்களை கொண்ட கட்சியான பொதுஜன பெரமுன மௌனமாகவே அந்த விடயத்தை கையாள்கிறது“ என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க, சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் என பலர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க அணிவகுத்து நிற்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|