அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தடை!
Thursday, October 19th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தடை விதித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நான்கு வாரங்களுக்கு இடைநிறுத்தபட்டுள்ளார்.
இன்றய நாடாளுமன்ற அமர்வின் போது வாய்மூல கேள்விகள் தொடுக்கப்பட்ட போது நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனை அடுத்து நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!
இன்னும் 80 நாட்களுக்குள் தேர்தல்: தேசப்பிரிய!
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
|
|
|


