900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும்போகச் செய்கையில் தொள்ளாயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயிகள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று மாகாண விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போதைய காலநிலையைப் பயன்படுத்தி விவசாயிகள் இந்த வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சின்ன வெங்காய குமிழ் விதைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் உண்மை விதை வெங்காய நாற்றுக்கள் மூலம் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அனேகமான விவசாயிகள் விதை (குமிழ்) வெங்காயங்களைப் பயன்படுத்தி செய்கையில் ஈடுபடுவதற்கே ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதத்தில் செய்கையில் ஈடுபட்டவர்கள் தற்போது அறுவடை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!
வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப...
|
|