38,875 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்பு!
 Tuesday, August 15th, 2017
        
                    Tuesday, August 15th, 2017
            கடந்த வருடத்தில் இலங்கை முழுவதிலும் 38 ஆயிரத்து 875 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என கடந்த 2016ஆம் ஆண்டுக்கான காவல்துறை செயற்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களின் படிய, 36,817 கிலோகிராம் கஞ்சா, 1,302 கிலோகிராம் கொக்கெய்ன், 205 கிலோகிராம் ஹெரோயின், 27 கிலோகிராம் ஹசிஸ், 15 கிலோகிராம் ஓபியம் மற்றும் 74 கிராம் மோபின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மும்மடங்கு அதிகரிப்பாக அமைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வருடத்தில் போதைகொருட்களுடன் தொடர்புடைய 88,352 குற்றங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 98 சதவீதமான விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த போதை பொருள் கடத்தல் சுற்றிவளைப்புகளில் காவல்துறை அதிரடிப்படை பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        