300 மில்லியன் மாம்பழ அறுவடை – விவசாய அமைச்சின் அறுவடை தொடர்பான முகாமைத்துவ நிறுவனம்!

Sunday, June 17th, 2018

மாம்பழ அறுவடையில் குறிப்பிடத்தக்க மாம்பழத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று விவசாய அமைச்சின் அறுவடை தொடர்பான முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கீழ் மாம்பழங்களைப் பொதியிடும் எட்டு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் அனுராதபுரம் அம்பாறை கண்டி போகஹாகந்த பேராதனை வெல்லவாய ஆகியன இதில் முக்கிய இடம் வகிக்கின்றன.

இந்த பொதியிடும் வலயங்களில் நாளாந்தம் 15 மில்லியன் மாம்பழங்கள் பொதியிடப்படுகின்றன. இரசாயனத் திரவங்கள் பயன்படுத்தப்படாத முறையில் மாங்காய்களை பழுக்க வைப்பதற்காக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இம்முறை 300 மில்லியன் மாம்பழங்களை அறுவடையாக பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Related posts:


  சகோதரனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டுச் சென்ற சிறுவன் - சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்திட...
நடமாடும் சேவை மூலமாக விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் - மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மைய...