2 நாட்களில் 100 மதுவரித்துறை சுற்றிவளைப்புகள்!

Friday, May 12th, 2017

கடந்த 2 நாட்களில் சுமார் 100 க்கும் அதிகமான மதுவரித்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாக பண்டிக்கை தினத்தில் விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த மதுபான போத்தல்களை விநியோகிப்பதற்காக சேகரித்து வைத்திருந்த இடங்கள் மதுவரித்துறை திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. அந்த திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பிரதி மதுவரித்துறை ஆணையாளர் அகில ரத்மலவின்ன இந்த தகவலை வௌியிட்டார்.

மதுவரித்துறை ஆணையாளர் நாயகம் எல்.கே.ஜி.குணவர்தனவின் அறிவுறுத்தலின் படி இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெசாக் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 15 திகதி வரை விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பொருட்டு நாடளாவிய ரீதியாக 63 இடங்களில் அதிகாரிகள் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts:


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு!
பாடசாலைகளில் தைப்பொங்கல் விழாவை மார்கழியில் கொண்டாடுவது கவலையளிக்கிறது - வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங...
மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் – பொலிஸ் குற்றப்...