187 மரண தண்டனைக் கைதிகளின் தண்டணை சிறைத் தண்டனையாகக் குறைப்பு!

2015 டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல், 2016 மே20ஆம் திகதிவரையிலான் காலப்பகுதியில், 187 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையானது, ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனையாக தளர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், செப்டெம்பர் மாதம் வரையிலான அமைச்சின் முன்னேற்ற அறிக்கை, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை ஆயுள்தண்டனை வரை சிறைத்தண்டனையாக தளர்த்துவதற்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிதற்கு, நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு, 2013.09.26ஆம் திகதியின்போது சகல வழக்குகள் மற்றும் மேன்முறையீடுகள் முடிவடைந்து மரண தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவது இக்குழு மூலம் செய்யப்படுகிறது. ஜனாதிபதியிடம் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்கு 3 தடவைகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|