ஹட்டனில் லொறி விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியை
ஏற்றிசென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் லொறியில் சென்ற மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், சாரதிக்கு நித்திரை வந்தமையே விபத்துக்காண காரணம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
தமிழகத்திலிருந்து 75 பேர் நாடு திரும்பவுள்ளனர்!
நெல் கொள்வனவுக்கு 4.2 பில் ஒதுக்கீடு!
மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது - ஜனாதிபதி கோட்டப...
|
|