வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றிவளைப்பு!
Tuesday, August 9th, 2016
மட்டக்களப்பு, கொம்மாதுறைக் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்திவந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, அந்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் இயங்கிவந்தமை தெரியவந்தது.
குறித்த நிலையத்திலிருந்து 25 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டுக் காப்புறுதிப்பத்திரங்கள், விமானப் பற்றுசீட்டுகள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியதுடன், 31 வயது சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!
வேலைவாய்ப்பிற்காக ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 450 பேர் நாட்டை விட்...
உலகில் பெண் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில். பின்தங்கிய இலங்கை! -
|
|
|


