வேலையின்போது மயங்கி விழுந்து ஒருவர் மரணம் !
Saturday, December 30th, 2017
வெய்யிலின் மத்தியில் உழவியந்திரத்தில் கிடுகுகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமானார்.
கொடிகாமம் பகுதியில் இந்த பரிதாபம் இடம்பெற்றது மட்டுவில் தெற்கு-சாவகச்சேரியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவஞானம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவர் ஆவார் .
கிடுகு வியாபாரத்தில் இவர் ஈடுபட்டு வருகின்றார், கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியில் உள்ள வழவு ஒன்றில் கிடுகுகளை நேற்று முற்பகல் இவர் உழவியந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாh.; இதன் போது திடீரென மயங்கி விழுந்தார்.இதனையடுத்து உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் விண்ணப்பம் கோரல்!
குருனாகலில் பாடசாலை மாணவி மரணம்: 2800 மாணவர்கள் தப்பியோட்டம்!
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 700 கொள்கலன்கள் துறைமுகத்தில்!
|
|
|


