வேலையின்போது மயங்கி விழுந்து ஒருவர் மரணம் !

வெய்யிலின் மத்தியில் உழவியந்திரத்தில் கிடுகுகளை ஏற்றிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமானார்.
கொடிகாமம் பகுதியில் இந்த பரிதாபம் இடம்பெற்றது மட்டுவில் தெற்கு-சாவகச்சேரியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவஞானம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவர் ஆவார் .
கிடுகு வியாபாரத்தில் இவர் ஈடுபட்டு வருகின்றார், கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியில் உள்ள வழவு ஒன்றில் கிடுகுகளை நேற்று முற்பகல் இவர் உழவியந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்தாh.; இதன் போது திடீரென மயங்கி விழுந்தார்.இதனையடுத்து உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
கணவரைக் காணவில்லை: மனைவி முறைப்பாடு!
யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தக...
வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
|
|