வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி!
 Thursday, July 27th, 2017
        
                    Thursday, July 27th, 2017
            
வடக்கில் சுனாமி வீடமைப்பு திட்டமொன்றை அமைப்பது தொடர்பில் 200 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக டிரான் அலஸ் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னர் நீதிமன்றம் டிரான் அலஸ்ஸின் கடவுச்சீட்டை நீதிமன்ற பாதுகாப்பின் கீழ் எடுத்து வெளிநாட்டு பயணதை தடை செய்திருந்தது.மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாத காலத்திற்கு சிங்கப்பூர் செல்ல அவர் தனது சட்டத்தரணிகள் மூலம் கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி அவர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அனுமதி வழங்கினார். இதுபற்றி குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.பத்து லட்சம் ரூபா தனிப்பட்ட பிணையின் அடிப்படையில் டிரான் அலஸின் கடவுச்சீட்டு விடுவிக்கப்படவுள்ளது.இதேவேளை, கடவுச்சீட்டை மீளவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம...
அரசியல்வாதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        