வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் மாற்றம்!

Thursday, March 17th, 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் இலங்கைப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வயதெல்லையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்கும் செல்லும் பணிப்பெண்களுக்காக நடைமுறைப் படுத்தபடவுள்ளது.

இதேவேளை, சவுதி அரேபியாவிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25  குவைட், ஜோர்தான், டுபாய், லெபனான், கட்டார், பஹரேன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான வயதெல்லை 23 இவையே தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத சிங்கப்பூர், ஹொங்ஹொங், மலேசியா, ஸைபிரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்களின் தற்போதைய வயதெல்லை 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட வயதெல்லைகளிலே திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: