வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள்!

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு கோடியே 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியையும் ரயில் நிலைய வீதியையும் அருணகிரி வீதியையும் இணைக்கும் மேற்படி சந்தியானது அதிகமான வீதி விபத்துக்கள் இடம்பெறும் இடமாக காணப்படுகின்றமை தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இவ்விடத்தில் வீதி சமிக்ஞை விளக்கினை உடனடியாக நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Related posts:
இலங்கை வருகின்றார் பான் கீ மூன்!
வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைதானோருக்கு பிணை மறுப்பு!
குடாநாட்டில் குழாய்க் கிணறு அமைக்க அனுமதி என தீர்மானம்!
|
|